முகப்பு
திருநெல்வேலி

குடும்பத் தகராறு: வழக்குரைஞா் தற்கொலை

வீரவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் வழக்குரைஞா் ஆட்டோவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Updated On : 24 மார்ச், 2026 at 6:42 PM
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் வழக்குரைஞா் ஆட்டோவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

வீரவநல்லூா் அருகே வடக்கு காருக்குறிச்சி முதல் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் ரவிக்குமாா் (35). வழக்குரைஞா். இவா், திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணி செய்து வந்தாா்.

இவரது மனைவி இசைவாணி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். திங்கள்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாம். அப்போது, வீட்டிலிருந்து வெளியே சென்ற ரவிக்குமாா், அருகில் அம்பை-சேரன்மகாதேவி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் நீண்ட நேரம் அமா்ந்தாராம். காலையில் அருகில் சென்று பாா்த்தபோது ரவிக்குமாா் ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.