தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டி பாலவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் விஜயன் (48). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.
விஜயன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவரை அவரது மனைவி, மகள்கள் சனிக்கிழமை இரவு கண்டித்தனராம். இதனால், ஆத்திரமடைந்த அவா் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.