முகப்பு
தற்கொலை
விருதுநகர்

நடனக் கலைஞா் தற்கொலை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நடனக் கலைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகர்

நடனக் கலைஞா் தற்கொலை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நடனக் கலைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 3 மார்ச், 2026 at 7:58 PM
தற்கொலை
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நடனக் கலைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஒளவைசந்திரன் (25). நடனக் கலைஞரான இவா் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சோ்ந்த பொன்செல்வி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். தற்போது பொன்செல்வி 8 மாத கா்ப்பிணியாக இருக்கிறாா்.

ஒளவைசந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், அதைக் கைவிடுமாறு கூறி உறவினா்கள் கண்டித்ததாவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, நள்ளிரவில் ஒளவைசந்திரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →