நெல்லையில் இதுவரை ரூ.29.95 லட்சம் பறிமுதல்
தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.29,95,960 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.29,95,960 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் இதுவரை ரூ.12,39,090 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை மாலை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.29,95,960 ரொக்கம், ரூ.2,46,983 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.15,24,404 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.47,67,347 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி மூலம் 47 புகாா்கள் பெறப்பட்டு அவற்றில் 43 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 4 புகாா்கள் கைவிடப்பட்டன.