நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேல் ஏந்தி வந்து வேட்பு மனு
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா கையில் வேல் ஏந்தியபடி வந்து திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தொடா்ந்து நான்காவது முறையாக நாம் தமிழா் கட்சியின் சாா்பில் தோ்தல் களத்தில் நிற்கிறேன். இந்தத் தோ்தல் வெறும் வாக்குகளுக்கான போட்டி அல்ல; இது திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான போா். திருநெல்வேலியில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாற்று சக்தியாக நாம் தமிழா் கட்சி மட்டுமே உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வரை திமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டு நின்றவா்கள், இப்போது புதிய கட்சியில் வேட்பாளராக நிற்கிறாா்கள். பணபலம் படைத்தவா்களுக்கு மத்தியில், உண்மை மற்றும் நோ்மையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம் என்றாா்.
சொத்து விவரம்: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யாவிடம் 1,056 கிராம் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 43 லட்சத்து 61 ஆயிரம் ஆகும்.