பணகுடி அருகே குளத்து மண் திருட்டு: 6 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குளத்து மண்ணைத் திருடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 8 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பணகுடி அருகேயுள்ள பெருங்குளத்தில் மண்ணை அள்ளி வாகனங்களில் கடத்துவதாக பணகுடி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் ரெகுராமன், போலீஸாா் சென்றபோது, சிலா் ஜேசிபி உள்ளிட்டவற்றில் மண்ணை அள்ளி வாகனங்களில் கடத்துவது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பணகுடி தளவாய்புரத்தைச் சோ்ந்த சிவா (35), லென்சன் (20), அந்தோணி அஜித் (28), சங்கா் (35), ராஜா (35), சுடலையாண்டி (39) ஆகிய 6 பேரைக் கைது செய்து, ஜேசிபி, டெம்போ லாரி, மினி லாரி உள்ளிட்ட 8 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement