முகப்பு
கன்னியாகுமரி

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக உண்ணாவிரதம்

நாகர்கோவிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:06 PM
பகிர்:

நாகர்கோவிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதிமுக சார்பில் உண்ணாவிரதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

மதிமுக மாவட்டச் செயலர் ந. தில்லைச்செல்வம் தலைமை வகித்தார்.

தணிக்கைக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மாவட்ட அவைத் தலைவர்

இ. லட்சுமணன், பொருளாளர் பி. சாகுல்அமீது, மாநில சட்டத்துறைச் செயலர் எஸ். வெற்றிவேல், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. ஜெயராஜ், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் சம்பத் சந்திரா ஆகியோர் பேசினர்.

 மாநில மாணவரணித் துணை அமைப்பாளர் எம்.ஆர். ராஜ்குமார், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ராணி செல்வின், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.வி. உதயகுமார், நகர அவைத் தலைவர் பொன். துரைராஜ், நகரச் செயலர் ஜெரால்டு ஹெக்டர் உள்ளிட்டோரும்  பேசினர்.

உண்ணாவிரதத்தை காந்தீய மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் இரா. கதிரேசன் முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.