கன்னியாகுமரி

கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

DIN

அனைத்திந்திய கிராம அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலை தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
கோட்டத் தலைவர் வி. சுகுமாரன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் எஸ்.பி. சுபாஷ் முன்னிலை வகித்தார். போராட்டத்தை கோட்டச் செயலர் ஏ.இஸ்மாயில் தொடங்கிவைத்தார். நிர்வாகிகள் சேகர், கண்ணன், பொன்னுசாமி, வேணு, ரெமா, ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல் படுத்தவேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி இலாக ஊழியராக்கவேண்டும். மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் , சென்னை தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பு படி கிராமிய அஞ்சல் ஊழியருக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். அலுவலர்கள் ,கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து மிரட்டும் போக்கினை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரைதொடர்ந்து போராட்டம் நடைபெறும் கோட்ட ச் செயலர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT