கன்னியாகுமரி

வெளிநாடு வாழ் தமிழக ஆசிரியர்கள்  சந்திப்பு

DIN

வெளிநாடு வாழ் தமிழக ஆசிரியர் சங்கம் சார்பில் ஆண்டிறுதி சந்திப்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. 
சங்கத் தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் ஜோசப்,  பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
குமரி மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் நடராஜன் கலந்துகொண்டு பேசியது: ஆசிரியர்கள் வாழும் உதாரணங்களாக மாறாவிட்டால் மாணவர்களை மாற்ற முடியாது.  மாணவர்களுக்கு அறிவையும் நம்பிக்கையையும் ஊட்டும் திறனை வைத்துதான் ஆசிரியரின் மதிப்பை அளவிடலாம். தாயின் கருவறையை காட்டிலும் ஆசிரியரின் வகுப்பறை பாதுகாப்பானது என ஒரு பெண்குழந்தை சொல்லுமானால் அதுதான் ஆசிரியர்களின் வெற்றி. பிறரை தோற்கடிப்பது அல்ல வெற்றி; நம் குறைகளை கண்டறிந்து களைவதுதான் வெற்றி என்றார் அவர்.
இதில்,  மாலத்தீவில் ஆசிரியர் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT