கன்னியாகுமரி

முறிந்து விழுந்த மரம்: குமரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

DIN

நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் பகுதியில் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. அதன் பக்கக்கிளை  ஒன்று திங்கள்கிழமை மாலையில் சாலையில் திடீரென முறிந்து விழுந்தது.
இதனால் நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி  செல்லும் வாகனங்களும், கன்னியாகுமரியில் இருந்த நாகர்கோவில் நோக்கி வரும் வாகனங்களும் செல்ல முடியாமல் சாலையில் நின்றன. மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அணி வகுத்து நின்றன.  நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தினர்  மரக் கிளையினை அப்புறப்படுத்திய   பின்னர் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT