கன்னியாகுமரி

குருசுமலை வைரவிழா திருப்பயணம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

குருசுமலையில் வைர விழா திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்ட எல்லைப் பகுதியான வெள்ளறடை-பத்துகாணி அருகே குருசு மலை உள்ளது.
நெய்யாற்றின்கரை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இக்குருசு மலையில் ஆண்டு தோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி திருப்பயணம் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு இங்கு 60ஆவது ஆண்டு வைர விழா திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இத்திருப்பயணம் ஏப்.2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையில் குருசுமலை அடிவாரத்தில் கொடியேற்றம் நடத்தப்பட்டது. நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடியேற்றினார். இதில், குருசுமலை இயக்குநர் வின்சென்ட் கே. பீட்டர், குருசுமலை அறக்கட்டளை நிர்வாகி ஜி.கிறிஸ்துதாஸ், துணை ஒருங்கிணைப்பாளர் மனோகியம் சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து திருப்பயண தொடக்க திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசைபாக்கியம் தலைமை வகித்தார்.
முன்னதாக வெள்ளறடையிலிருந்து குருசுமலை வரை வைரவிழா கலாசாரப் பவனி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை மீட்பு!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT