கன்னியாகுமரி

குழித்துறையில்  இன்று பிஎஸ்என்எல் சார்பில் "லோக் அதாலத்'

DIN

பிஎஸ்என்எல் நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் சார்பில் மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்)  முகாம் குழித்துறையில் புதன்கிழமை (நவ.15)  நடைபெறுகிறது. இதுகுறித்து பிஎஸ்என்எல் மக்கள் தொடர்பு அலுவலர் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தில் தரைவழி இணைப்பில் கட்டண பாக்கி காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளவர்களுக்கு , விதிகளுக்கு உள்பட்டு உரிய தள்ளுபடி பெற்றுக்கொண்டு, பாக்கி தொகையை தீர்வு செய்வதற்கும் , தேவையானால் மறு இணைப்பு பெற்று கொள்ளவும் " லோக் அதாலத்' நிகழ்ச்சி குழித்துறை நீதி மன்றத்தில்  புதன்கிழமை (நவ.15) காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது.
அருமனை, செறுவலூர், கடையல், களியக்காவிளை, கொல்லங்கோடு, குலசேகரம், குழித்துறை, மார்த்தாண்டம், மூவாற்றுக்கோணம், பைங்குளம், தேங்காய்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT