கன்னியாகுமரி

குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

DIN

கன்னியாகுமரி  ரயில் நிலையம் அருகிலுள்ள குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி,  கோயிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு மிருத்ஞ்சய் ஹோமம், காலை 7 மணிக்கு கோமாதா பூஜை, காலை 9 மணிக்கு சங்குபூஜை, காலை 10.30 மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
 பிற்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 12.30 மணிக்கு ரிஷபவாகனத்தில் சுவாமி, அம்பாள் வாகன பவனி, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை குகநாதீஸ்வரர் பக்தர்கள் சங்கத் தலைவர் எம்.கோபி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT