கன்னியாகுமரி

எறும்புக்காட்டில் விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

ராஜாக்கமங்கலம் வட்டாரம், எறும்புக்காட்டில் வாழையில் நூற்புழு மேலாண்மை பற்றி, வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
கிள்ளிகுளம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த 4  ஆம் ஆண்டு மாணவர்கள் யூசுப் அலி, ரவீந்திரன், அழகுராஜா, மதன்குமார்,கார்த்திகேயன்,  விக்னேஷ், அய்யப்பன், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் அங்குள்ள விவசாயிகளுக்கு நூற்புழு மேலாண்மை பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினர்.
இதன் மூலம்"நூற்புழு மற்றும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம். எனவே, அதிக மகசூல் பெற முடியும்" என்பது பற்றியும் விளக்க உரையாற்றினார்கள். இது குறித்து செயல்விளக்கமும் அங்குள்ள விவசாயிகளுக்கு செய்து காட்டினர். இதில் திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர்முனைவர் ராமகிருஷ்ணன், உதவி பேராசிரியர்கள் லதா,கவிதா, முன்னோடி விவசாயி மீனாட்சி சுந்தரம்  மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT