கன்னியாகுமரி

பள்ளியாடியில் கைத்தறி கலைஞர்களுக்கான மேம்பாட்டு முகாம்

DIN

கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கான மேம்பாட்டு முகாம் பள்ளியாடி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில்   நடைபெற்றது.
மத்திய அரசின் தகவல்- ஒலிபரப்பு அமைச்சகம், திருநெல்வேலி கள விளம்பர அலுவலகம், நாகர்கோவில் கைத்தறி, துணி நூல் உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இம் முகாமுக்கு, குமரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்து, பணமில்லா பரிவர்த்தனை, முத்ரா திட்டம், திறன் இந்தியா, பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.
திருநெல்வேலி கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் பேசினார். தொடர்ந்து, கைத்தறி நெசவாளர்களுக்கான திட்டங்கள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலக ஆய்வாளர் தங்கசாமி விளக்கினார்.
பள்ளியாடி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பால்ராஜ் வரவேற்றார். கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர் குமேஷ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியாடி நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT