கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு: மருத்துவக் கல்லூரி டீன் தகவல்

DIN

குமரி மாவட்டத்தில் 4 வயது சிறுவன் உள்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் எஸ்.எம்.கண்ணன்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் எஸ்.எம்.கண்ணன் தலைமையில்  ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் எம்.பி.விஜயகுமார் பங்கேற்று, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் டீன் பேசியது: குமரி மாவட்டத்தில் தற்போது 81 பேர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 7 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 7 பேரில் 4 பேர் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 3 பேரில் 4 வயது சிறுவன் எபனேசர் கிருபாகரன், 12 வயது மணிகண்டன், 10 வயது சகாய சாஜூ ஆகிய 3  பேருக்கு ரத்த பரிசோதனை மூலம் வியாழக்கிழமைதான் டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் (ஜூலை முதல் அக்டோபர் வரை) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை அருமனையில் உயிரிழந்த நபர் டெங்கு காய்ச்சலால் உயிரிழக்கவில்லை. அவர் தீவிர வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வரும் நபர்களுக்கு தேவையான படுக்கை வசதிகளும், அவர்களுக்கு தேவையான கஞ்சி உள்ளிட்ட நீர் ஆகார உணவுகளும் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. அவற்றை தடையின்றி வழங்கவும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாக பகுதிகளில் எம்.பி.விஜயகுமார் ஆய்வு செய்தபோது, ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியிலுள்ள ஊழியர்கள் தங்களுக்கான தினசரி ஊதியத்தை சரியாக வழங்குவதில்லை என்றும், குறைவாக வழங்குவதாகவும் புகார் அளித்தனர்.
அதை கேட்ட அவர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை நேரில் அழைத்து ஊழியர்களுக்கான சரியான ஊதியத்தை வழங்குமாறு எச்சரித்தார்.  தக்கலை அரசு மருத்துவமனையிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் எம்.பி. கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT