கன்னியாகுமரி

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்வு: குமரியில் 6126 பேர் பங்கேற்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு தொழில்நுட்பக் கல்லூரி, விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 6126 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி, அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டாறு டி.வி.டி. மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வினை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தேர்வுக்காக, 7,578 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். 20 மையங்களில், 384 தேர்வு கூடங்களில் இத்தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வினை கண்காணிக்க, 20 முதன்மை கண்காணிப்பாளர்களும், 20 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், 20 துறை அலுவலர்கள் (பல்வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள்), 20 கூடுதல் துறை அலுவலர்கள் (பல்வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள்), 384 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 260 பிற அலுவலர்கள் (ஆசிரியர்கள்) என மொத்தம் 724 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்வுகளை கண்காணித்தனர்.
விண்ணப்பித்தவர்களில் 1,452 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. ஆய்வின் போது நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆறுமுகம், மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT