முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் மழை: சுருளகோட்டில் 43 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக சுருளகோட்டில் 43 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:24 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக சுருளகோட்டில் 43 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரியில் மலையோரப் பகுதிகளிலும்,  அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிமை காலை 8 மணிக்கு எடுக்கப்பட்ட அளவீட்டின் படி, அதிகபட்சமாக சுருளகோட்டில் 43 மி.மீ.,  பேச்சிப்பாறையில் 28 மி.மீ., பெருஞ்சாணியில் 15.4 மி.மீ.,  சிற்றாறு 2இல் 17.2 மி.மீ., அடையாமடையில் 14 மி.மீ.,  நாகர்கோவிலில் 5.8 மி.மீ., முள்ளங்கினாவிளையில் 4 மி.மீ.,  கொட்டாரத்தில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 
பேச்சிப்பாறை அணைக்கு தற்போது விநாடிக்கு 60 கன அடி நீர்வரத்து உள்ளது. இந்தத் தண்ணீர் அப்படியே பாசனக் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 24 கன அடி நீர்வரத்து உள்ளது. இதர அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பேச்சிப்பாறை அணை தவிர இதர அணைகளின் மதகுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.