தக்கலையில் தேமுதிகவினர்ஆர்ப்பாட்டம்
தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலர் டி. ஜெகநாதன் தலைமை வகித்தார். தக்கலை ஒன்றியச் செயலர் ஆர்.எஸ். டேவிட், மாவட்ட அவைத்தலைவர் ஸ்ரீகுமார், ஒன்றிய அவைத்தலைவர் மகாவிஷ்ணு, ஒன்றியப் பொருளாளர் ஸ்டீபன், நகர அவைத்தலைவர் ஜான் சத்தியராஜ், நகரப் பொருளர் நாகராஜன், மாவட்ட துணைச் செயலர் வழக்குரைஞர் ஐடன்சோனி, மாவட்ட துணை தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல்கபூர், செயலர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.வி. மது மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.