கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் தொடர் சங்கிலி பறிப்பு: மதுரையை சேர்ந்தவர் கைது; 13 பவுன் நகைகள் மீட்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த சேகர் மனைவி  அபிராமசுந்தரி (54). இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது,  மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்,  அவர் கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாராம். இதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும்  தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து உதவி ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,  இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டம், கீழகுயில்குடி, சீனிவாச நகரைச் சேர்ந்த நீலகண்டனை (34) போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில்,  அவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதையடுத்து நீலகண்டனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து, 13 பவுன் நகைகளை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT