கன்னியாகுமரி

விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியின் 50ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரிச் செயலர் சி. ராஜன் தலைமை வகித்தார். முதல்வர் நீலமோகன், கல்லூரி கல்விக்கழகத் தலைவர் எஸ். துரைசாமி, பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்நிகழ்வில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கிப் பேசியதாவது:  கல்லூரி வாழ்க்கைதான் மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் இந்தப் பட்டம் மட்டுமே உங்கள் வாழ்க்கையை தீர்மானித்துவிடாது. 
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலக்கினைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். உயர்ந்த எண்ணங்களை மனதில் கொண்டு போராடவேண்டும். அப்போதுதான் நீங்கள் கற்ற கல்வி பயனளிக்கும் என்றார் அவர்.  நிகழ்ச்சிகளை பேராசிரியர்கள் கே. இளங்குமார், ஆர். தர்மரஜினி ஆகியோர் 
ஒருங்கிணைத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT