முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளில் இன்று தொழிலாளர் தின சிறப்பு கிராமசபைக் கூட்டம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளர் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 1)   நடைபெறுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளர் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 1)   நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குள்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 11  மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம்  மற்றும் அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும்  வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
எனவே,  பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →