கன்னியாகுமரி

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் பவித்ரோத்சவ விழா

DIN

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் பவித்ரோத்சவ விழா 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு பகவத் பிரார்த்தனை, வேதபாராயணம், நாம சங்கீர்த்தனமும், வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு புண்யாகவாசனம்,  சிறப்பு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சயன சேவை, சிறப்பு  ஹோமம், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனமும்  நடைபெற்றது. சனிக்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம்,  பவித்ரோத்சவ ஹோமம், பூர்ணாஹுதி, அதைத் தொடர்ந்து பெருமாள்  மற்றும் கருடாழ்வாருக்கு பவித்ரமாலை சமர்ப்பணம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சுவாமி வீதி உலா, தீபாராதனையை தொடர்ந்து  பக்தர்களுக்கு பவித்ரமாலை பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான  ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ரவிபட்டாச்சாரியார் தலைமையில்  விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT