கன்னியாகுமரி

பத்மநாபபுரம் நகராட்சியில் வணிக வளாக கடைகள் ஏலம்: ரூ 33.49 லட்சம் கூடுதல் வருவாய்

DIN


பத்மநாபபுரம் நகராட்சிக்கு உள்பட்ட காமராஜர் பேருந்து நிலைய வணிக வளாக கடைகள் மற்றும் பேட்டை சந்தை கடைகள், வாடகைக்கு ஒப்பந்தபுள்ளி மற்றும் ஏலம் விட்டதில் கடந்த ஆண்டை விட ரூ 33.49 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு படி பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏல நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை வகித்தார் . பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் மூர்த்தி முன்னிலை வகித்தார். நாகர்கோவில் நகராட்சி மேலாளர் ராமஜெயம், வருவாய் அலுவலர் குமார்சிங், பத்மநாபபுரம் நகராட்சி மேலாளர் சக்தி குமார், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன் மற்றும் மாவட்ட அரசு அரசு அலுவலர்கள், வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
இதில், காமராஜர் பேருந்து நிலைய வணிக வளாக கடைகள், பேட்டை சந்தை உள்ளிட்ட 57 கடைகள் ஏலம் விட்டதில் ஒர் ஆண்டுக்கு ரூ. 52 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதன் முலம் கடந்த ஆண்டு ஏல வருவாயை கூடுதலாக ரூ . 33.49 லட்சம் நகராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT