கன்னியாகுமரி

நாகர்கோவிலில் சிங்காரவேலர் நினைவு கருத்தரங்கம்

DIN

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்பட்ட ம. சிங்காரவேலர் நினைவு தினம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் அனுசரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த ம. சிங்காரவேலரின் 72ஆவது நினைவு தினம் கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்குக்கு  தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஜி. செலஸ்டின் தலைமை வகித்தார். 
கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க நிர்வாகி பிரபா வரவேற்றார். சிஐடியூ மாவட்டச் செயலர் கே. தங்கமோகன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க நிர்வாகி ஏ. மரிய ஸ்டீபன், கன்னியாகுமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி தலைவர் எம். அகமது உசேன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.   தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் ஏ. சேவியர் மனோகரன், கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் தலைவர் குமரி ஸ்டீபன், சிஐடியூ மாவட்டத் தலைவர் பி. சிங்காரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
இதில், கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத் தலைவர் கே. அலெக்சாண்டர், கோட்டாறு புனித வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் ஏ. ஜெயபால், கிருஷ்ணன்கோவில் ஊர்தலைவர் டி. மிக்கேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில்,  பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிங்காரவேலர் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன. 
முன்னதாக கிருஷ்ணன்கோவில் பரதர் தெருவில் வைக்கப்பட்டிருந்த சிங்காரவேலரின் உருவப்படத்துக்கு, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம், சிஐடியூ மற்றும் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT