கன்னியாகுமரி

குமரி, தக்கலையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

DIN

கன்னியாகுமரி, தக்கலை பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்தநாள் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது.
கொட்டாரம் சந்திப்பில் அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர் 70 பேருக்கு தென்னங்கன்று, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பி.வின்ஸ்டன், ஆர்.எஸ்.மாசானமுத்து, ஆ.கண்ணன், டி.பாலகிருஷ்ணன், லெட்சுமணன், சுந்தர்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காந்தி மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியி ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பித்தங்கம் 70 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றியச் செயலர் டி.அரிகிருஷ்ணபெருமாள், பகவதியப்பன், சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி காவல் நிலைய ரவுண்டானா சந்திப்பில் பேரூர் அதிமுக செயலர் பி.வின்ஸ்டன் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில், நிர்வாகிகள் எஸ்.பீட்டர், இ.முத்துசாமி, பகவதியப்பன், சுரேஷ், பூலோகராஜா, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தக்கலை: தக்கலை பேருந்து நிலையத்தில் ஜெயலலிதா படத்திற்கு அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞர் ராபர்ட்சிங், பத்மநாபபுரம் முன்னாள் நகர் மன்றத் தலைவர் சத்தியதேவி, துணைத் தலைவர் பீர்முகம்மது, நிர்வாகிகள் ஜாண்ரோஸ், சிவனிசதீஸ், முன்னாள் அரசு வழக்குரைஞர் செல்வராஜன், தங்கமணி, அசரப், கிறிஸ்டோபர், திருமால், ஜாண்சன், மணிகண்டன், ஜகபர், நீலா, பிரசன்னகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT