கன்னியாகுமரி

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு

DIN

அகஸ்தீசுவரம் மற்றும் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்   மாவட்ட ஆட்சியர்  சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெள்ளிக்கிழமை   ஆய்வு மேற்கொண்டார்.
 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வகம், மருந்தகம், உள் நோயாளிகளின் பிரிவு, பிரசவ அறை, பிரசவ பின் கவனிப்பு அறை, ரத்த பரிசோதனைக் கூடம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை கூடங்கள், சித்தா பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெண்கள் மருத்துவப்பகுதி, ஆண்கள் மருத்துவப்பகுதி மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்குச்  சென்ற ஆட்சியர், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை பார்வையிட்டு, மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்து, உரிய சிகிச்சைகளை வழங்கிட, மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரர் பணிகள்)  மதுசூதனன்,  சரஸ்வதி,  மஞ்சு உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT