கன்னியாகுமரி

இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கூட்டம்

DIN

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை(அக்.14) நடைபெறுகிறது. 
இதுகுறித்து குமரி மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை.
குமரி மேற்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச்சாவடிகள் பிரதிநிதிகள் கூட்டம் அக்,14 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சுவாமியார்மடத்தில் உள்ள வசந்த மாளிகை மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில்,  அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும்,  தமிழக காங்கிரஸ் பொறுப்பளருமான சஞ்சய்தத் பேசுகிறார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து சாங்கை பகுதியில் உள்ள மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, வார்டு கமிட்டி  நிர்வாகிகள் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து அவர் கருத்து கேட்கிறார். எனவே அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT