கன்னியாகுமரி

நாகர்கோவிலில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற ஓய்வு பெற்ற பேராசிரியை சாவு

DIN

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை தெரசா ஜோஸ்பின் ராணி (60). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர்,  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து,  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். இவரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியதாகவும், இந்த ஆய்வின் அடிப்படையில்தான் பன்றிக் காய்ச்சலால் இறந்தாரா என்பது உறுதி செய்யப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை டீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT