கன்னியாகுமரி

அண்ணா பிறந்தநாள்: குமரியில் திமுகவினர் மாலையணிவித்து மரியாதை

DIN


மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள அண்ணா உருவச் சிலைக்கு அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர் என். தாமரைபாரதி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில், மாவட்ட திமுக துணைச் செயலர் கே. முத்துசாமி, வடக்கு ஒன்றியச் செயலர் எம். மதியழகன், கன்னியாகுமரி பேரூர் திமுக செயலர் குமரி ஸ்டீபன், மாநில திமுக தொண்டரணி முன்னாள் துணை அமைப்பாளர் பாலஜனாதிபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சி. சாய்ராம், பேரூர் செயலர்கள் வைகுண்டபெருமாள், பாபு, முத்து, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தக்கலை, செப். 15: தக்கலையில் உள்ள அண்ணா சிலைக்கு அம்மா முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ் தலைமையில் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு, டாக்டர் மாதேசன், வழக்குரைஞர்கள் மார்டின் ஜோஸ், சௌந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
பத்மநாபபுரம் நகரம் சார்பில் திமுக நகரச் செயலர் மணி தலைமையில் அக்கட்சியினர் தக்கலையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தக்கலை வடக்கு ஒன்றியச் செயலர் அருளானந்த ஜார்ஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரேவன்கில், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வர்க்கீஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் வின்சர், ஒன்றிய அவைத்தலைவர் குமாரசுவாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திங்கள்நகரிலுள்ள ஒன்றிய திமுக கழக அலுவலகத்தில் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குருந்தன்கோடு ஒன்றியச் செயலர் எப்.எம். ராஜரெத்தினம் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT