கன்னியாகுமரி

குமரியில் தூய்மை சேவைப் பணி தொடக்கம்

DIN


மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தூய்மை சேவைப் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரும் அக். 2ஆம் தேதி காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதிய தூய்மைத் திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தூய்மையே உண்மையான சேவை' என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை (செப்.15) தொடங்கிவைத்தார்.
இதன் ஒருகட்டமாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மை சேவைப் பணியில் ஈடுபட்டனர். இப்பணியை கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலமுருகன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லச்சாமி, விவேகானந்தா கல்லூரி முதல்வர் நீலமோகன், கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அதிகாரி பிரபாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில், மீன்வளத் துறை உதவி இயக்குநர் தீபா தலைமையில் தனியார் கல்லூரி மாணவர்கள் தூய்மை சேவைப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT