கன்னியாகுமரி

வாக்களிப்பின் அவசியம்: கல்லூரி  மாணவர்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி மாணவர், மாணவிகள்

DIN

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் நீலமோகன் தலைமை வகித்து பேசினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ராமகுமார் விளக்கவுரையாற்றினார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுஜாதா வரவேற்றார். பொதுமக்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம்  மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர், மாணவிகள் ஒன்றிணைந்து வாக்களிப்பின் அவசியத்தை கலைநிகழ்ச்சி மூலம் வலியுறுத்தினர். மாணவி ஆஸ்லின் ஜெபா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT