கன்னியாகுமரி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கிறிஸ்தவ தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பு

DIN

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 மாவட்ட அதிமுக மருத்துவ அணி செயலர் டாக்டர் சி.என். ராஜதுரை தலைமையில் அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் எஸ்.அழகேசன், ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பித்தங்கம் மற்றும் நிர்வாகிகள் வி.எஸ்.வினோத், என்.பார்த்தசாரதி, தாமரை தினேஷ் உள்ளிட்டோர் அகஸ்தீசுவரம் ஒன்றியத்திற்குள்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதிரியார்களை  சந்தித்து வாக்கு சேகரித்தனர்.  
   கன்னியாகுமரி மகாதானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பேராசிரியர் இ.நீலபெருமாள் தலைமையில் பஞ்சலிங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட சுண்டன்பரப்பு, பருத்திவிளை, பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சக்திவேல், குமார், முருகன், சுடலையாண்டி, தங்கப்பன், ரெத்தினம், அய்யப்பன், ஈஸ்வரன், செந்தில்குமார், முத்துகுமார், முருகேசன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT