கன்னியாகுமரி

சில்லறை வணிகப் பாதுகாப்புக் கோரி குமரி-திருச்சிக்கு பிரசாரப் பயணம்

DIN

சில்லறை வணிகத்தை பாதுகாக்கவும்,  ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்கவும், பன்னாட்டு நிறுவனங்களைப் புறக்கணிக்கவும்  வலியுறுத்தி, குமரி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பிரசாரப் பயணம் செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கியது . 
     இந்நிகழ்வுக்கு, குமரி மாவட்டத் தலைவர் எல்.எம்.டேவிட்சன் தலைமை வகித்தார். செயலர் சி.நாராயணராஜா, பொருளாளர் ஜே.பி,ஜேம்ஸ் மார்ஷல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பா.தம்பித்தங்கம் பயணத்தை தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் மற்றும் வியாபாரிகள் பி.பகவதியப்பன், பாலு, நாராயணன், ஜாண்சன், பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி மலைக்கோட்டையில்  பயணம் நிறைவடையும். அங்கு  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தலைமையில் சுதேசி பிரகடனம் மேற் கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT