கன்னியாகுமரி

ஜெயலலிதா பிறந்த நாள்: அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தோவாளையில் ஒன்றிய அதிமுக சார்பில்  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணகுமார் தலைமையில்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 தொடர்ந்து ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டு,   ஏழைகளுக்கு இலவசமாக வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தோவாளை கிருஷ்ணசாமி கோயில்,  முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட துணைச் செயலர் லதாராமச்சந்திரன், இணைச் செயலர் பாக்கியலட்சுமி,  மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலர் சதீஷ்,  ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் தென்கரை மகாராஜன், துணைச் செயலர்கள் அய்யப்பன், ரோகிணி,  மாவட்டப் பிரதிநிதி பொன்னிகிருஷ்ணமூர்த்தி,  பாலகிருஷ்ணன்,  ஜெ. பேரவை இணைச் செயலர் இ.என்.சங்கர்,  பேரூராட்சி செயலர்கள் மாடசாமி, தாழக்குடி அய்யப்பன்,  ஊராட்சி செயலர்கள் எஸ்.டி.நாகராஜன், தெள்ளாந்தி மணிகண்டன்,  இறச்சகுளம் மகாராஜன்,  தடிக்காரன்கோணம் நாகராஜன், திருப்பதிசாரம் சேகர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:  கன்னியாகுமரி ரவுண்டானாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூர் செயலர் பி.வின்ஸ்டன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன் கேக் வெட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து பகவதியம்மன் கோயிலில் அன்னதானத்தை  தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் எஸ்.அழகேசன்,  மாவட்ட இணைச் செயலர் ஏ.ராஜன், மாவட்ட மருத்துவ அணி செயலர் சி.என்.ராஜதுரை,  நிர்வாகிகள் எஸ்.பீட்டர், பூலோகராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
காந்தி மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அகஸ்தீசுவரம் ஒன்றிய அவைத் தலைவர் பா.தம்பித்தங்கம் 200 பெண்களுக்கு சேலைகள் வழங்கினார்.  சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  
இதில், அதிமுக நிர்வாகிகள் இ.முத்துசாமி, என்.பார்த்தசாரதி, பி.பகவதியப்பன், கே.செல்லபாண்டியன், சதாசிவம் மணி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்தாமரைகுளம்:   பேரூர் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணிச் செயலர் சி.என்.ராஜதுரை,  ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். 
மாவட்ட முன்னாள் செயலர் டி.சதாசிவம், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் எஸ்.அழகேசன், பேரூர் செயலர் தாமரைதினேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலர் ஏ.சுந்தர்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT