கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியில் கஞ்சா வைத்திருந்ததாக10 மாணவர்கள் சஸ்பெண்ட்

DIN

நாகர்கோவில் அருகே பறக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் கஞ்சா வைத்திருந்ததாக 10 மாணவர்களை தலைமையாசிரியர் சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
குமரி மாவட்டம்,  பறக்கை  அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர்,  மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பதை  பார்த்த ஆசிரியர்கள்,  இதுகுறித்து தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.    அவர்  சுசீந்திரம் போலீஸாரிடம்  அளித்த தகவலையடுத்து பள்ளி வளாகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.  மேலும் கஞ்சா வைத்திருந்ததாக கூறப்பட்ட  மாணவர்களிடமும்  விசாரித்தனர்.  இதையடுத்து, தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்ததாக பள்ளி மாணவர்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து தலைமையாசிரியர் உத்தரவிட்டார்.  
அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு எப்படி கஞ்சா வந்தது?  யார் விநியோகம் செய்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அண்மைகாலமாக, குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா அதிகளவில் புழங்குவது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT