கன்னியாகுமரி

முளகுமூடு தூய மரியன்னை ஆலய விழா கொடியேற்றம்

DIN


புலியூர்குறிச்சி மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வீரமரணவிழா, வரலாற்று தொடர்புடைய டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை அர்ச்சிப்பு விழா ஆகியன சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலய இறை மக்கள், பங்குதந்தை டோமினிக் கடாட்சதாஸ் தலைமையில் பங்குபேரவை துணைத்தலைவர் வின்சென்ட் முன்னிலையில் திருக்கொடியை பவனியாக எடுத்து வந்தனர். பூமாலையை மைலகோடு புனித மைக்கேல் அதிதூதர் ஆலய இறைமக்கள், பங்குதந்தை ஐசக் தலைமையில் கொண்டு வந்தனர். இதையடுத்து வாத்தியங்கள் முழங்க பனவிளை பங்குபணியாளர் ஜார்ஜ் பொன்னையா கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் திருப்பலி, மறையுரை ஆகியன நடைபெற்றது. இதில், திருத்தல அதிபரும், முளகுமூடு வட்டார முதல்வருமான ஹிலாரி, திருத்தல ஆன்மிக குரு மரியதாஸ், உள நல வழிகாட்டி மரியதாசன், முளகுமூடு பால்பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குநர் ஜெரால்டு ஜஸ்டின், அருள் பணியாளர் மைக்கேல் அலாசியஸ், ஜெயகுமார், மரியடேவிட், கிறிஸ்துதாஸ்,சகாயதாஸ், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், புலியூர்குறிச்சி பங்குபேரவை துணைதலைவர் ஆல்பர்ட் ஜெலஸ்டின், செயலர் ஜெலி, பொருளாளர் பாபு, துணைச்செயலர் கிறிஸ்டிபாய், மாடதட்டுவிளை, வில்லுக்குறி, தக்கலை , விலவூர், அப்பட்டுவிளை பங்குபேரவை நிர்வாகிகள், இறைமக்கள் பங்கேற்றனர். 
ஞாயிற்றுக்கிழமை (ஜன. 13) மாலை முட்டைக்காடு புனித சவேரியார் பங்கு தந்தை மனோகியம் சேவியர் தலைமையில் இறைமக்கள் திருயாத்திரையாக ஆலயத்துக்கு வருகின்றனர். பின்னர், மறையுரை நிகழ்ச்சி, 14 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பொங்கல் திருவிழா, இதைத்தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட முதன்மை பணியாளர் இயேசு ரெத்தினம் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. 
வைசிலின் சேவியர் மறையுரை ஆற்றுகிறார். உதயகிரி கோட்டையில் டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறைத் தோட்டம் அர்ச்சிப்பு சடங்கில் கலந்து கொள்பவர்கள் கட்டணமின்றி உதயகிரி கோட்டையை பார்வையிட அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT