கன்னியாகுமரி

கொடநாடு விவகாரத்தில் சதித் திட்டம் உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

கொடநாடு விவகாரத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக நினைக்கிறேன் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். 
நாகர்கோவிலில், செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: கொடநாடு விவகாரத்தில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தச் சதித் திட்ட பின்னணியில் உள்ளவர்கள் யார்? இத்தனை நாள்கள் இல்லாமல், எதற்காக தற்போது இப்பிரச்னையை கிளப்புகிறார்கள்? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டியது தமிழக அரசின், முதல்வரின் கடமை என்று கருதுகிறேன்.
பா.ஜ.க. கூட்டணி 75 சதவீத இடங்களை கைப்பற்றும். வலுவான கூட்டணியாக அமையும். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வாக்கு வங்கி, 1 சதவீதம் தான் இருக்கும். 
மக்களால் புறம் தள்ளப்பட்ட கட்சிகள்தான் அவை. பா.ஜ.க. எந்த கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை வைத்தாலும், அதை வெளிப்படையாக பேசும், தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று நினைத்துதான்,  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார் என்றார் அவர்.
பேட்டியின்போது, குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் முத்துராமன்,  நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT