கன்னியாகுமரி

அருமனையில் கலாசார ஊர்வலம்

DIN

அருமனையில் இந்து சமுதாயங்கள், ஆலயக் குழுக்கள் சார்பில் பொங்கல் விழா மற்றும் கலாசார ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருமனை புண்ணியம் அய்யா நிழல் தாங்கல் அருகிலிருந்து தொடங்கிய கலாசார ஊர்வலத்துக்கு, விழாக் குழுத் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
ஊர்வலத்தில் தாலப்பொலி அணிவகுப்பு, காவிக் கொடி அணிவகுப்பு, சிலம்பம், சமய வகுப்பு மாணவர், மாணவிகளின் மாறுவேடம், முத்துக் குடை வரிசை, யானை ஊர்வலம், வில்லுப்பாட்டு, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஊர்வலம் அருமனை நெடுங்குளம் சந்திப்பு அருகே நிறைவடைந்ததது.
பின்னர் பொங்கல் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அருமனை தனியார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கிஷோர் சந்த் குத்துவிளக்கேற்றினார். விழாக் குழுச் செயலர் விஜயகுமார் வரவேற்றார். வெள்ளிமலை சிவாத்மானந்தா சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். 
மத்திய இணை அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், அஸ்வினிகுமார் செளபே ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாக்குழு நிர்வாகி மதன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT