கன்னியாகுமரி

கொட்டாரம் அரசு மருத்துவமனையில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

DIN


தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கொட்டாரம் அரசு கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை சனிக்கிழமை நடைபெற்றது.
கொட்டாரம் பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களின் தொந்தரவு அதிகரித்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்கள் கடித்ததால் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, பேரூராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.இந்நிலையில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு நிதியின் கீழ் நாய்களை பிடித்து அரசு கால்நடை மருத்துவமனையில் கருத்தடை  அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. கொட்டாரம் பேரூராட்சி பகுதியில்  20 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கால்நடை மருத்துவர் ஆசீர் எட்வின் தலைமையில் கருத்தடை அறுவை சிகிச்சை அளிக்சகப்பட்டது. இதுகுறித்து ஆசீர் எட்வின் கூறியது: தெருக்களில் திரியும் நாய்களால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. பொதுமக்களும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு நிதி உதவியுடன் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து 2 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர், அவற்றை பிடித்த இடத்திலேயே கொண்டு விடப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT