கன்னியாகுமரி

கீழ்குளம் கோயிலடிவிளையில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் சாலை

DIN

கருங்கல் அருகேயுள்ள கீழ்குளம் கோயிலடிவிளையில் ரூ.5 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  
கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட கோயிலடிவிளையில் அரை கி.மீ. தொலைவுக்கு சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்டது.இதனால், அவதியடைந்து வந்த அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அச்சாலையைச் சீரமைக்க, கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மேலும், அங்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். இதில், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சுகுமாரன், கீழ்குளம் பேரூர் தலைவர் ஜெயராஜ், வட்டாரத் தலைவர் டென்னிஸ்,செயலர் குமார்,சேம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT