கன்னியாகுமரி

இரணியல் அரசு பள்ளிக்கு உபகரணங்கள் அளிப்பு

DIN

இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு  முன்னாள் மாணவர் சங்கம் சார்பில்  200 பிளாஸ்டிக் சேர்கள், 2 கணினிகள் ஆகியன வழங்கப்பட்டன. 
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் இப்பள்ளிக்கு 200 பிளாஸ்டிக் சேர்கள், 2 கணினி ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் எஸ். ராஜகோபால் தலைமை வகித்தார்.  பள்ளியின் முன்னாள் மாணவரும் தலக்குளம்  பி.எஸ். அறக்கட்டளை  தலைவரும், நரம்பியல் நிபுணருமான மருத்துவர் ப. ஆறுமுகம், கடல் வாழ் உயிரியல்துறை  விஞ்ஞானி  ஏ.பி.லிப்டன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கல்வி உபகரணங்களை பள்ளியின் தலைமையாசிரியை வி. ராஜேஸ்வரியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ். ரவிராஜ், முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 
அமைப்பின் இணைச்செயலர் என்.கண்ணன் வரவேற்றார்.  தலைமையாசிரியை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT