கன்னியாகுமரி

நாகர்கோவில், தக்கலையில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

DIN

பைங்குளம் வருவாய் ஆய்வாளர் ரியாஸை தாக்கிய மர்மநபர்கள் மீது புதுக்கடை   போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து,  தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர் சங்கத்தினர் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கோலப்பன் தலைமை வகித்தார். செயலர் சுப்பிரமணியன், மாநில பொதுச்செயலர் பார்த்திபன், துணைத் தலைவர்கள் சேகர், ரவி, சந்திரன்,இணைச்செயலர் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர்,  ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தக்கலை  வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட வருவாய்த் துறை சங்க  மாவட்டத் தலைவர் கோலப்பன் தலைமை வகித்தார்.  செயலர் சுப்ரமணியன்,  தக்கலை வட்டாரத் தலைவர் அனில் குமார்,  நிர்வாகிகள்  ஜெமி, சுபா, ஜோரி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT