கன்னியாகுமரி

மயிலாடி பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

மயிலாடி பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
 மயிலாடி சந்திப்பு, மருங்கூர் சாலைப் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் ந.அகஸ்திலிங்கம் தலைமையில் ஊழியர்கள் மேற்கூறிய கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.  பின்னர், கடை உரிமையாளர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டதுடன், மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT