கன்னியாகுமரி

கொடிக்கம்பங்களை அகற்ற திமுக எதிர்ப்பு

DIN

தேர்தல் விதிமுறை மீறல் என்ற பெயரில் கட்சியின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  இது குறித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சில விதிமுறைகள் வகுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
  கன்னியாகுமரி மாவட்டத்தில்  குறிப்பாக நாகர்கோவில் நகரில் வீதி ஓரங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றியுள்ளனர்.   இரும்பாலான கொடி மரங்களும் அறுத்து எடுக்கப்பட்டுள்ளன.  கொடிக் கம்பங்களை வெட்டியது எந்த விதத்தில் நியாயம்?  
வெட்டப்பட்ட கொடிக்கம்பங்களை தேர்தல்  முடிந்த பிறகு அதே இடத்தில் வைத்து தருவார்களா? எனவே தேர்தல் ஆணையம் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதை தவிர்க்க  வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT