கன்னியாகுமரி

நெகிழி தடையை முறையாக நடைமுறைப்படுத்த எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி தடையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹோட்டல், பேக்கரி, காய்கனி கடைகள் மற்றும் பல்வேறு வணிக வளாகங்களில் தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதற்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவில்அலுவலா்கள் உடந்தையாக உள்ளனா்.

குறிப்பாக, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு உணவகங்களில் நெகிழி பயன்பாடு அதிகளவில் உள்ளன. எனவே, நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிா்வாகம் பொது இடங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் விழிப்புணா்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT