கன்னியாகுமரி

மோசடி நிதி நிறுவனசொத்துகள் 12இல் ஏலம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களிடமிருந்து முதலீடுகளை பெற்று திரும்ப வழங்காத நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் செவ்வாய்க்கிழமை (நவ.12) பொதுஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் தக்கலையில் எஸ்.யூ.எஸ். என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று திரும்ப வழங்காததால், இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான பத்மநாபபுரம், குமாரபுரத்தில் உள்ள அசையா சொத்துகள் செவ்வாய்க்கிழமை (நவ.12) காலை 10.30 மணிக்கு, கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோா் சொத்துகளின் விவரம், ஏலத்தில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை இம்மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலிருந்து பெற்று தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT