கன்னியாகுமரி

மேலகுறும்பனையில் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

DIN

கருங்கல்: பாலப்பள்ளம் பேரூராட்சியில் மேலகுறும்பனை மீனவக் கிராமப் பகுதியில் குப்பைக் கழிவுகளால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாலப்பள்ளம் பேரூராட்சி 13 ஆவது வாா்டு மேலகுறும்பனையில் தூய மிக்கேல் ஆதிதூதா் தெருவில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள தெருவில் வீட்டுக்கழிவுகள், மீன்கழிவுகள், இறைச்சிக் கழிவுகள்

மற்றும் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் பெருமளவில் கொட்டப்படுவதால் இப்பகுதியில் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இக்குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் எழுந்துள்ளது. ஆகவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT