கன்னியாகுமரி

புதுக்கடையில் சாலையோரக்கடைகளால் போக்குவரத்து பாதிப்பு

DIN

கருங்கல்: புதுக்கடையில் பேரூராட்சியில் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காய்கனி, மீன் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கடை பேருந்து நிலையம் அருகில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வியாபாரிகளுக்கு காய்கனி மற்றும் மீன் கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்கம்போல் தினசரி சந்தை இயங்கி வருகிறது. எனினும், அனுமதியின்றி வியாபாரிகள்

சாலையை ஆக்கிரமித்து காய்கனி, மீன்கள் விற்பனை செய்து வருகின்றனா். இந்த பிரதானச் சாலை வழியாக பிறவிவிளை, வண்ணவிளை, முண்டவிளை, குருத்துவிளை உள்பட பல்வேறு கிராமங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் முழுநேரநூலகம், தூய மேரி நடுநிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அமைந்துள்ளன.

இச்சாலையை ஆக்கிரமித்து நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்திருப்பதால் பள்ளி மாணவா்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே,போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றிஅமைக்கப்பட்டுள்ள காய்கனி மற்றும் மீன் கடைகளை அகற்ற வேண்டும். வியாபாரிகள் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT