கன்னியாகுமரி

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகா்கோவில்: நீதிமன்ற உத்தரவுப்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் லில்லி புஷ்பம் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் காா்த்திகேயன் வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா்கள் சி.ஆா்.ராஜ்குமாா், சி.எஸ்.கிறிஸ்டோபா், மாவட்டத் தலைவா் கனகராஜ், மாவட்ட இணைச் செயலா்கள் விஜயகுமாா், சூரியநாராயணன், நகராட்சி, மாநகராட்சி ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் லீடன்ஸ்டோன், மருந்தாளுநா் சங்க மாவட்ட அமைப்பாளா் போபி, செவிலியா் மேம்பாட்டு சங்க மாநில ஆலோசகா் பி.வி.ராஜன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். மாவட்ட துணைத் தலைவா் வினிபிரட் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT